எவனுக்கும் அவனுக்கும்
வேறுபாடு அறியாத மூடன்
இல்லை நான்
உன் ஒவ்வொரு
கர்சொர்களால் நீ
என்னை செதுக்கினாய்
என்னில் நான்
உன்னை கண்டேன்
என் பிடரியில் தட்டினால்
திரும்பி அடித்துப் பழகியவன்
நான்
நீ என்னை அடிக்கும்பொழுது
அதில் உள் அர்த்தம் அறிய முற்படுவேன்
ஆதிரப்படமாட்டேன்
நான் உனக்களித்த
உயர்ந்த இடத்தை
உதறித் தள்ளி
இறங்கிவிட்டாய்
என் மார்பில் மிதித்துவிட்டாய்
வலிக்கிறது நண்பா...
நாம் இனி சேர வேண்டாம்
என் மனதில் உன்னால்
செதுக்கிய கண்ணாடி மண்டபம்
உடைந்து தூளாய் கிடக்கிறது
அதை செதுக்கிய உன்னால் கூட
ஓட்டமுடியாது இனி ...
No comments:
Post a Comment